லக்னோவிற்கு லக் - நோ. ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தியது
17வது ஐபிஎல் போட்டியின் நான்காவது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ராஜஸ்தான் அணியுடன் மோதியது. டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பட்லர் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் 11(9) ரன்களில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்து ஆட்டம் இருந்தார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்த சாம்சன் மற்றும் ரியான் பராக் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை விரைவாக அதிகரித்தனர். இந்த ஜோடி 59 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ரியான் பராக் 43(29) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஹெட்மயர் 5(7) வந்த வேகத்தில் வெளியேறினார். பின்பு களமிறங்கிய துருவ் ஜுரைல் 20(12) தன் பங்குக்கு அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 193 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 52 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய லக்னோ அணியின் டி காக் 4(5) முதல் ஓவரிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். படிக்கல் 0(3), பதோனி 1(5) என அடுத்தடுத்த வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற லக்னோ அணி 3.1 ஓவர்களில் 11 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த போதும் ராகுல் ஒருபுறம் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அடுத்து வந்த தீபக் ஹீடா தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடி 26(13) ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய பூரான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். அணியின் எண்ணிக்கை 145 ஆக இருந்தபோது இந்த கூட்டணியை சந்திப் சர்மா உடைத்தார். ராகுல் 58(44) ரன்களில் ஆட்டம் இழந்தார். ராகுல் -பூரான் இருவரும் இணைந்து 52 பந்துகளில் 85 ரன்கள் குவித்தனர். பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே குவித்தது. ராஜஸ்தானி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Post a Comment