சென்னை அணி அபார வெற்றி
17வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
டூப்லசிஸ், விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய டூப்லசிஸ் 23 பந்துகளில் 35 ரன்கள் குறித்து ஆட்டம் இழந்தார். மறுபுறம் விராட் கோலி பொறுமையாக விளையாடிக் கொண்டிருக்க, முஷ்தபிசூர் ரஹ்மான் வேகத்தில் ஒரே ஓவரில் ரஜட் படித்தர் (0) மேக்ஸ்வெல்(0) வந்த வேகத்தில் நடையை கட்டினர்.
பிறகு விராட் கோலியும், க்ரிஸ் கிரீனும் மிகவும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். மீண்டும் பந்து வீச வந்த முஸ்தபிசூர் ரஹ்மான் இம்முறை ஒரே ஓவரில் விராட் கோலி மற்றும் க்ரிஸ் கிரீன் இருவரையும் அவுட்டாக்கினர். அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல்லும் தனது முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேற பெங்களூர் அணி 78/5 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் பொறுப்புடன் விளையாடிய அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிறப்பாக ஆடிய அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 173/6 குவித்தது.
பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் ருத்ராட்ஜ் கெய்க்வாட் ஒரு புறம் பொறுமையாக விளையாட மறுபறம் பெங்களூர் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்பு வந்த வீரர்கள் பொறுமையாக விளையாட 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய சிவம் தூபே ஆரம்பத்திலேயே மட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் கட்டையை போட்டு பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்.
கடைசி ஐந்து ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரவிந்திர ஜடேஜாவும், சிவம் தூபேவும் அதிரடியாக விளையாடி 18.4 ஓவர்களில் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த போட்டியில் விராத் கோலி 21 ரன்கள் சேர்த்ததின் மூலம் டி20 போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் இந்திய வீர் என்ற பெருமையை பெற்றார். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Post a Comment